கடன் கேட்ட பென்னை 6 மணிக்கு மேல் அழைத்த வங்கி அதிகாரி!! கடன் கேட்ட பெண் குடும்பத்துடன் சென்று கும்மாங்குத்து!!

திருக்குவளை அடுத்த தாங்கள் கிராமத்தில் வசித்து வருபவர் கமலவேணி இவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் மகளிர் சுய உதவி குழுவில் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார் இதையடுத்து அந்த வங்கியின் மேலாளர் கமலவேணியின் செல்போன் எண்ணிற்கு 6 மணிக்கு மேல் போன் செய்துள்ளார் இரண்டு முறை எடுக்கவில்லை என்றாலும் மூன்றாவது முறையும் கால் செய்திருக்கிறார் அப்பொழுது இணைப்பை எடுத்த கமலவேணியின் மகன் கோபிநாத் வங்கி மேலாளரிடம் விசாரிக்க அவர் கமலவேணியிடும் கொடுக்கச் சொல்லி மிரட்டி இருக்கிறார் இதனால் ஆத்திரமடைந்த கோபிநாத் ஒரு முனையில் திட்ட மறுமுனையில் வங்கி மேலாளரும் வாய்க்கு வந்தபடி பேசி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கோபிநாத நேராக சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வாக்குவாதம் முற்ற வங்கி மேலாளரை தரதரவென வெளியே இழுத்துவந்துள்ளார் இதை தடுக்க வங்கி ஊழியர்கள் கோபிநாத்தை ஒரு பக்கம் பிடித்து அழுத்தி இதனை வெளியே இருந்து பார்த்த கோபிநாத்தின் குடும்பத்தினர் உள்ளே நுழைந்து சராமாரியாக வங்கி ஊழியர்களின் வங்கி மேலாளரின் தாக்கியுள்ளனர் சுதாரித்துக்கொண்ட வங்கி மேலாளர் வங்கியின் உள்ளே சென்று தாழிட்டுக் கொண்டு காவல்துறைக்கு தகவல் தொடுத்துள்ளார்.

விரைந்து வந்த காவல்துறையினர் வங்கி மேலாளரை மீட்டுச் சென்றனர் விசாரணையில் விண்ணப்பத்தில் ஒரு சான்றிதழ் வைக்க தவறி விட்டதால் அதை போன் செய்து கேட்டதாகக் கூறி உள்ளார் இதனை ஏற்க மறுத்த காவல்துறையினர் அப்படியே அவர் சேர்க்கவில்லை என்றாலும் வங்கி நேரம் 4 மணியுடன் முடிந்துவிட்டது 6 மணிக்கு அழைக்க வேண்டிய காரணம் என்ன என்று விசாரித்து வருகின்றனர் கோபிநாத்தை தேடி வந்த காவல்துறையினர் அவர் வங்கி ஊழியர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி தெரிந்ததும் அவரை அங்கேயே விசாரித்தனர்.