வலிமை படத்தை தொடர்ந்து தல அஜித் நடிக்கும் தல 61 திரைப்படத்தை யார் இயக்க போகிறார், யார் தயாரிக்க போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்து வந்தது. குறிப்பாக பல இயக்குனர்களுடைய பெயர் இதில் அடிபட்டு வந்தது.

ஆனால் இறுதியாக இயக்குனர் சுதா கொங்கராதான் இப்படத்தை இயக்க இருக்கிறார் என்னும் தகவல் வெளியானது. இந்த தகவல் தற்போது உறுதியாகி உள்ளது. இந்த படத்தின் கதையும் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டே எடுக்கப்பட இருக்கிறதாம். மேலும் முழு ஸ்க்ரிப்ட் உருவாக்கும் பணியை தற்போது சுதா கொங்கரா ஆரம்பித்துள்ளார்.

மேலும் இப்படத்தை தயாரிக்க பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வந்தது. இறுதியாக ஸ்ரீ கோகுலம் ஸ்டுடியோஸ்தான் இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்கள் என்னும் தகவல் தற்போது உறுதியாகி உள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.