எஸ்.பி.பி விஷயத்தில் அஜித் எடுத்த அதிரடி முடிவு இதோ !

தமிழ் திரையுலகில் டாப் 3 நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

தல அஜித் தற்போது தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக இருந்தாலும், முதன் முதலில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்கள் மூலமாக தான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

அவரின் மறைவிற்கு நடிகர் அஜித் வருவார் என எதிர்பார்த்து கொண்டிருந்த நேரத்தில், இறுதி சடங்கு வரை நடிகர் அஜித் வரவில்லை. இது அஜித்தின் ரசிகர்களுக்கே பெரும் அதிருப்தியை தந்தது.

ஆனால் எஸ்.பி.பி இறந்தது கேட்டு தல அஜித் மிகவும் சோகத்தில் இருப்பதாக செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும் விரைவில் எஸ்.பி.பி வீட்டுக்கும், அவரது நினைவிடத்திற்கும் செல்ல இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.