எல்லா படங்களிலுமே வில்லியாக தெரிந்தாலும், நிஜ வாழ்கையில் மிகபாசமான அம்மாவாக இருக்கும் நடிகை!

சினிமாவில் ஒரு வில்லன் அல்லது வில்லி நடிகர்களை காட்டும் போது பலருக்குமே அவர்கள் நடிப்பினை பார்த்து அட நிஜத்துலுமே ஒருவேளை இப்படி தான் இருப்பாரோ என்னமோ என்று நினைக்கும் அளவிற்கு நடித்து இருப்பார்கள். சினிமாவில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வில்லிகளில் ஒரு சில பேரை யாராலும் மறக்க முடியாது. அப்படி சில படங்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சூசன் ஜார்ஜ். கடந்த சில வருடங்களாக இவர் 2010 ஆம் ஆண்டு பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா படத்தில் போலீசுக்கு மனைவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. இந்த படத்தில் மிக பெரிய அளவில் பல மக்களிடையே பிரபலமாக ஆனார். அந்த படத்திற்கு பின்னர் அவர் நண்பேண்டா, அர்ஜுனன் என் காதலி, ராரா, நர்த்தகி, என சில படங்களிலில் நடித்து இருந்தார் ஆனால் அந்த கதாபாத்திரங்கள் பெரிய அளவில் பேசப்பட வில்லை மேலும் மீண்டும் ஒரு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ராட்சசன் உட்பட பல படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களிலும் நடித்துள்ளார். அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் மூலம் இவர் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார்.

இவர் இப்போது இவருடைய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவைனை பார்த்து பலருக்கும் ஆச்சர்யமாக இருந்து வருகிறது. அது நடிகை சூசன் தன் மகனுடன் இருக்கும் புகைப்படம். பல பேருக்கு சூசனுக்கு திருமணம் ஆனதா? என்று தெரியாத நிலையில் இவர் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள போகிறார் என்று கூறி வருகின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அப்படி இவர் கலந்துகொண்டால் அந்த நிகழ்ச்சியில் கண்டட் கொடுப்பதில் இன்னொரு வனிதாவாக இருப்பதற்கு ஆச்சரியம் எதுவும் இல்லை என்பது உறுதி.

By admin