சமீபத்தில் தளபதி விஜய்க்கு தெரியாமல் அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மகனின் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.

ஆனால் எஸ்ஏ சந்திரசேகரின் இந்த செயலுக்கு நடிகர் விஜய் மறுப்பு தெரிவித்து, தனது ரசிகர்கள் யாரும் தந்தையின் கட்சியில் இணைய வேண்டாம் என்ற அறிக்கையை வெளியிட்டார்.

அதன்பின் தளபதி விஜயின் குடும்பத்தில் ஒரு சில பிரச்சினை நிலவி தெரிகிறது. இதெல்லாம் ஒருபுறமிருக்க, தளபதி விஜய்க்காக பல தியாகங்களை செய்த எஸ்ஏ சந்திரசேகர் கேள்வி எழுப்புமாறு நெட்டிசன்கள் கற்பனையான கமெண்டுகளை சமூக வலைத்தளங்களில் தெறிக்க விடுகின்றனர்.

அதிலும் குறிப்பாக விசுவின் அம்மையப்பன் கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் விதமாக பல பதிவுகளை பதிவிடகின்றனர்.

அதில் ‘நடிகை அஞ்சு கூட உன்னோட படம் ஓடாத போது மீட்டர் வட்டிக்கு வாங்கி சொந்த படமெடுத்து அழகு பார்த்த இந்த அம்மையப்பன் சந்திரசேகர் கண்ணுக்கு தெரியலையா மிஸ்டர் விஜய்!’

மேலும் ‘புள்ள ஆசைப்பட்டான் னு ஒரே காரணத்துக்கு மூன்று படங்களில் சங்கவியை ஹீரோயினாக போட்டு நடிக்க வச்சா அம்மையப்பன் சந்திரசேகரனை உனக்கு தெரியலையா மிஸ்டர் விஜய்!’

அதுமட்டுமில்லாமல், ’நடிச்சா ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்த போது கடன் வாங்கி கஷ்டத்தையும் பார்க்காமல் நாளைய தீர்ப்பு மூலம் நடிகராக தொடர்ந்து பல படங்களில் நடிக்க வச்ச இந்த அம்மையப்பன் நினைவில்லையா மிஸ்டர் விஜய்!’

மேலும் ’சூப்பர் ஹிட் படம் சந்திரமுகி படத்திற்கு இணையாக வந்த சச்சினை ஓடவைக்க படாதபாடுபட்டு சென்னை கமலா தியேட்டரை குத்தகைக்கு எடுத்த சந்திரசேகர் தெரியவில்லையா மிஸ்டர் விஜய்!’ என்று நெட்டிசன்கள் தங்கள் திறமையை கமெண்ட் களில் தெறிக்கவிடுகின்றனர்.