இளம் வயதில் ஹோட்டலில் சமந்தா செய்த வேலை !! 8 மணி நேரத்துக்கு இவ்ளோதான் அமௌண்ட்டா ?? வாயைப்பிளந்த ரசிகர்கள் !

நடிகை சமந்தா முதல் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் சமந்தா திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

என்னதான் பிசியாக இருந்தாலும் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். இவர் அடிக்கடி சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உறையாடுவதும் உண்டு. இப்படி சமீபத்தில் நடிகை சமந்தா தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், சினிமா கேரியரை குறித்தும் சோசியல் மீடியாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர் வாங்கிய முதல் சம்பளம் வேலை குறித்து பகிர்ந்துள்ளார். அவருடைய முதல் வருமானம் 500 ரூபாயாம்.ஒரு ஓட்டலில் 8 மணி நேரம் hostess ஆக வேலை பார்த்துள்ளார். அப்போது அவர் பத்தாவது வகுப்பில் படித்து கொண்டிருந்திருக்கின்றார்.வாழ்க்கையில் பல தடைகளை தாண்டி இன்று பெண்களுக்கு முன்மாதிரியாக உள்ளார்.

By admin