இயக்குனரின் பாசத்திற்காக சூப்பர்ஸ்டார் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய்..!!

நடிகர் விஜய், தனது பீஸ்ட் படத்தை தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. மிரட்டலான உளவாளி கெட்டப்பில், நடிகர் விஜய் ஒட்டு மொத்த கதையும் தோளில் தூக்கி சுமப்பதாக படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் படத்தை கழிவி ஊற்றி வருகின்றனர். இந்த நிலையில், பிரபல இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின், கெஸ்ட் ரோலில் நடித்து தருமாறு தளபதி விஜய்யிடம் அட்லீ கோரிக்கை விடுத்துள்ளார்.

அட்லீயும், விஜய்யும் அண்ணன் தம்பியாக பழகி வருவதால், அவரது கோரிக்கையை நிராகரிக்க முடியாமல் தளபதியும் ஒப்புக் கொண்டுவிட்டதாக பேசப்படுகிறது. இதுபோக, இந்த படத்தில் நயன்தாரா நடித்து முடித்துவிட்டதாகவும் பேசப்படுகின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக்கான் தளபதி விஜயுடன் மேடையில் நடந்து ஆடி மகிழ்ந்தார் அதோடு அந்த நட்பு நில்லாமல் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஹிந்தி ட்ரெய்லரை சமூக வலைத்தளங்களிலும் வௌஜயஜட்டு மகிழந்தார் ஷாருக்கான் இந்த நட்பின் அடிப்படையில் தான் விஜய் இதில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

By vaithy