தமிழ் சினிமாவில் மெகா ஹிட்டடித்த பழைய திரைப் படங்களின் கதையை அடுத்த பாகத்திற்கு கொண்டு செல்ல முன் வந்துள்ளார்கள். அந்த வகையில் சமீபத்தில் பில்லா, எந்திரன், காஞ்சனா என பல திரைப்படங்கள் இரண்டாம் மூன்றாம் பாகம் என சென்று கொண்டிருக்கிறது.

இன்நிலையை 20 ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட முதல்வன் என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்க உள்ளார்கள். இவ்வாறு பிரமாண்டமான வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்திருப்பார்.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க தல அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம் அதுமட்டுமில்லாமல் சங்கர் அஜித்திடம் இந்த இரண்டாம் பாகத்தின் கதையை கூறிய உள்ளாராம் இந்த திரைப்படத்தின் கதை மிக அருமையாக இருக்கிறது அது மட்டுமில்லாமல் எனக்கு பிடித்திருக்கிறது என்று தல அஜித் கூறியுள்ளாராம்.

ஆனால் தல அஜித் தற்போது வலிமை படத்தில் மிக பிஸியாக இருப்பதன் காரணமாக முதல்வன் 2 திரைப்படத்தை பற்றி அப்புறம் பேசிக்கொள்ளலாம் என தல அஜித் கூறியுள்ளாராம் இவ்வாறு அவர் கூறியதை பார்த்தால் தல 61 திரைப்படமானது முதல்வன் 2 என ரசிகர்கள் பரவலாக பேசுகிறார்கள்.