இந்தியாவிலேயே யாரும் செய்யாத சாதனை..சோஷியல் மீடியா கிங்.. மாஸ்டர் என்பதை நிரூபித்த விஜய்!

நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் போது எடுத்த செல்பி ஒன்று மாபெரும் சாதனையை செய்து உள்ளது. இதுவரை எந்த ஹீரோவும் செய்யாத சாதனையை இந்த செல்பி செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் வீட்டில் முன் வருமான வரித்துறை சோதனை செய்தது. தமிழகம் முழுக்க இந்த வருமான வரி சோதனை பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையின் முடிவில் அவரின் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவரின் வீட்டில் இருந்து ஆவணங்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.

எல்லாம் சுத்தம்

விஜய் முறையாக வருமான வரி கட்டி இருக்கிறார். அவர் முறைகேடு செய்யவில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்தது. இந்த வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் கிடைத்தது. இந்த படத்தின் ஷூட்டிங்கில் விஜய் இருந்த போதுதான் அவரிடம் வருமான வரித்துறை சோதனை செய்தது. நெய்வேலி என்எல்சியில் ஷூட்டிங் நடக்கும் போது, அங்கே வந்த அதிகாரிகள் விஜயை அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

முழு நாள் விசாரணை

ஒருநாள் முழுக்க விஜயை அவரின் வீட்டில் வைத்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். ஷூட்டிங் பாதியில் விஜய் இப்படி அழைத்து செல்லப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் மறுநாள் வரை இந்த விசாரணை நடந்தது. பின் இரண்டு நாள் கழித்துதான் விஜய் மீண்டும் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.

ஷூட்டிங் கலந்து கொண்டார்

வருமான வரி சோதனைக்கு பின் விஜய் ஷூட்டிங் சென்று இருந்தார். அப்போது நடிகர் விஜய்யை காண என்எல்சி முன்பு ரசிகர்கள் பலர் கூடியிருந்தனர். இவர்களை பார்க்க அந்த இடத்திற்கு வந்த விஜய் அங்கிருந்த வேன் ஒன்றின் மீது ஏறி நின்று ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அதன்பின் அவர்களை பார்த்து செல்பி எடுத்தார். பின் பக்கம் ரசிகர்கள் நிற்க, விஜய் எடுத்த செல்பி பெரிய வைரல் ஆனது.

பெரிய வைரல்

இந்த நிலையில் எடுத்த இந்த செல்பி மாபெரும் சாதனையை செய்து உள்ளது. இதுவரை எந்த ஹீரோவும் செய்யாத சாதனையை இந்த செல்பி செய்துள்ளது. 146.5 ஆயிரம் முறை இந்த புகைப்படம் ரீ டிவிட் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் 359.2 ஆயிரம் முறை இந்த புகைப்படம் லைக் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே நடிகர் ஒருவரின் போஸ்ட், படம் இவ்வளவு முறை ரீ டிவிட் செய்யப்பட்டது இதுவே முதல்முறை.

சாதனை

இதற்கு முன் தான் வெளியிட்ட பிகில் பட பர்ஸ்ட் லுக் சாதனையை விஜய் இதன் மூலம் முறியடித்துள்ளார். அதேபோல் ஷாருக்கான், அக்சய் குமாரின் புகைப்படங்கள், டிவிட்கள் செய்த சாதனையை இவர் முறியடித்துள்ளார். விஜயின் இந்த செல்பிதான் இந்தியாவிலேயே நடிகர் ஒருவரின் அதிக ரீ டிவிட் செய்யப்பட புகைப்படம் ஆகும்.