இது வரை அஜித் நடித்த படங்களிலேயே இது தான் ரொம்ப பிடிக்கும் ! பழம்பெரும் நடிகை சரோஜா தேவி புகழாரம் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தன்னுடைய திறமை மற்றும் விடா முயற்சியும் மட்டுமே நம்பி இன்று உச்சத்தை தொட்டுள்ளார்.

பொதுவாக தல அஜித்துடன் நடித்த நடிகர், நடிகைகள் அனைவருமே அவர் ஒரு ஜென்டில் மேன். மரியாதை கொடுக்க தெரிந்த மனிதர் என புகழ்ந்து கேட்டுள்ளோம்.

இந்த கால நடிகைகள் அனைவருமே அஜித்துடன் நடிக்க ஒரு படத்திலாவது வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கி வருகின்றனர். ஆனால் பழம்பெரும் நடிகையான சரோஜா தேவிக்கும் அஜித் பேவரைட் நடிகராக இடம் பிடித்துள்ளார் என்பது ஆச்சரியம் தான்.

இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் எனக்கு அஜித் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் நடித்த படங்களிலேயே என்னை அறிந்தால் திரைப்படம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

அஜித்தைப் பிடிக்கும், அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தை பிடிக்குமென பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி கூறியிருப்பது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியாக்கியுள்ளது.