தல அஜித் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் வலிமை படத்தில் 70% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். இதுவரை எடுக்கப்பட்ட இவர்கள் இருவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் எல்லாமே சிறப்பாக வந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

குறிப்பாக இந்த படத்தில் அஜித் கார்த்திகேயா மோதும் காட்சிகள் தியேட்டரில் அனல் பறக்கும் அளவிற்கு இருக்குமாம் இந்த நிலையில் நேற்று திடீரென நடிகர் கார்த்திகேயாவின் workout வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவியது.

இந்த படத்தின் climax காட்சிக்கான தயாரிப்புக்குதான் தற்போது கார்த்திகேயா கடும் உடற்பயிற்சி செய்து வருகிறாராம். இந்த காட்சிகளைதான் அடுத்த கட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் படமாக்க இருக்கிறார்களாம். 2021 வலிமை சம்பவம் தரமா இருக்கும்