தல அஜித் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் வலிமை படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு இதுவரை முடிந்துள்ளது. மொத்தமாக 70% படப்பிடிப்பு இதுவரை நடைபெற்றுள்ளது. அடுத்த நான்காவது கட்ட படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் நடக்க உள்ளது.

இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்திய ஒரு பேட்டியில் வலிமை படத்தின் 3 பாடல்கள் முடிந்தது என்றும், இரண்டு தீம் மியூசிக்கில் ஒன்றை முடித்து விட்டதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் வலிமை படத்தின் மெயின் தீம் மியூசிக்கை தற்போது யுவன் முடித்து விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அதன்படி மரண மாஸாக உருவாகியிருக்கும் இந்த தீம் மியூசிக்கோடு சேர்த்து தல அஜித்தை தியேட்டரில் பார்க்கும் போது, தியேட்டரில் அனல் பறக்குற அளவிற்கு இருக்குமாம். அந்த அளவுக்கு வெறித்தனமான தீம் மகயூசிக்காக இருக்கிறதாம்.