அத்துமீறிய கள்ளக்காதலன் கணவன் மனைவி சேர்ந்து கொலை செய்த சம்பவம்!!

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் சேர்ந்தவர் தேவேந்திர சிங் இவரது மனைவி சாயா இவர்களுக்கு மூன்று பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள் இந்நிலையில் தேவேந்திர சிங்கின் மனைவியான சாயா விற்கும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மனோஜ் என்பவருக்கும் வேலை செய்யும் இடத்தில் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருவரும் அங்கு இங்கு சீண்டுவது மட்டும் செய்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவரது வீட்டிற்கே சென்று வர ஆரம்பித்துள்ளார் சாயா சம்பவத்தன்று இருசக்கர வாகனம் ஒன்றில் கணவன் மனைவி இருவரும் சென்று கொண்டிருக்க வழியில் காவல்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவர்கள் வண்டியை நிறுத்த அதிவேகத்தில் நிறுத்தாமல் சென்றிருக்கிறார்கள் கணவன் மற்றும் மனைவி இதையடுத்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் துரத்திச் சென்று இருவரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் வைத்திருந்த மெத்தை ஒன்று ரத்தக்கறையுடன் இருந்தது அதை திறக்கச் சொல்லி பார்த்ததில் அதிர்ச்சி அடைந்தனர் காவல்துறையினர் ஏனெனில் அதில் ஒரு ஆண் சடலம் ரத்த வெள்ளத்தில் இருந்து உள்ளது இதையடுத்து விசாரணையை தொடங்கிய காவல்துறை இடம் உண்மையை இருவரும் கூறியுள்ளனர் இந்த தகாத உறவினால் ஒருகட்டத்தில் கணவனை விட்டுவிட்டு தன்னுடன் வந்து விடுமாறு வற்புறுத்துகிறான் மனோஜ்.

குழந்தைகளை விட்டு செல்ல மனமில்லாத சாயா மறுத்து வந்திருக்கிறார் இதனிடையே நெருக்கமாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை உனது கணவனுக்கு அனுப்பி விடுவேன் எனவும் சமூக வலைத்தளத்தில் ஏற்றி விடுவேன் என்று மிரட்டியுள்ளார் செய்வதறியாது தவித்த தனது கணவனிடம் இதை பற்றி கூறியுள்ளார் கணவரும் மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டு மனோஜை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அன்று ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார் சாயா. இருவரும் சுத்தியால் அடித்து மனோஜை கொலை செய்து அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பேசுவதற்காக செல்லும்போது போலீஸின் பிடியில் சிக்கிக் கொண்டனர் என்பது தெரியவந்தது.