அதிரடியாக வேட்டையை தொடங்கிய வலிமை.. பாதி படத்திலேயே விறுவிறுப்பாக நடக்கும் வியாபாரம்

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்த நிலையில் covid-19 பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

இத்திரைப்படத்தின் வில்லன் யார் என்பது இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் RX 100 திரைப்படத்தின் ஹீரோ கார்த்திகேயா அப்டேட்டிற்காக காத்திருங்கள் எனும் டிவிட்டர் பதிவினை வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இந்நிலையில் கார்த்திகேயா ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இதனை தொடர்ந்து வலிமை படத்தின் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக தான் கார்த்திகேயா ஹைதராபாத் வந்து அடைந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் படம் முடிவதற்குள்ளேயே விநியோகஸ்தர்கள் பாதி விலையை கொடுத்து புக்கிங் செய்து வருவதாக செய்திகள் கிடைத்துள்ளது. கண்டிப்பாக வலிமை படம் ஹிட் அடித்து விடும் என நம்பிய விநியோகஸ்தர்கள் எவ்வளவு விலை சொன்னாலும் வாங்க தயாராக இருக்கிறார்களாம்.

அடுத்த மாதம் தல அஜித் அவர்கள் வலிமை. படப்பிடிப்பில் அஜித் வருவார் என்று கோடம்பாக்கத்தில் கிசு கிசு படுகிறது . எனவே தல ரசிகர்கள் ரெடி ஆகுங்க !