அதிரடியாக வலிமை படத்தில் இணைந்த மிகப்பெரும் ஹாலிவுட் பிரபலம் ! இதுவரை வெளியாகாத உண்மை தகவல் !

தல அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் ஆரம்பமானது. இந்த படப்பிடிப்பில் அஜித் இல்லாத சில பைக் சேசிங் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதோடு இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா இந்த படப்பிடிப்பில் பங்கேற்றார்.

இந்த படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான ஹியூமா குரேஷி நடிக்கிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் ஹைதராபாத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பில் தல அஜித்தும் பங்கேற்கிறாராம்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில், பைக் சேசிங் காட்சிகள் எடுக்கப்பட்டபோது ஹாலிவுட் திரையுலகை சார்ந்த ஒரு ஸ்டண்ட் கலைஞர் படப்பிடிப்பு தளத்தில் இருந்ததாக கூறப்படுகிறது . மேலும் இப்படத்தில் வரும் பல ஆக்ஷன் காட்சிகளை திலீப் சுப்பராயனுடன் இணைந்து அவரும் பணியாற்றுகிறார் என்னும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.