வருகிற 2021 மே 1 அஜித் ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாளாக மாறப் போகிறது என ஒரு தகவல் இணையத்தில் கசிந்து வருகிறது. அந்த நாளில் அஜித் ரசிகர்களுக்கு இரண்டு ட்ரீட் காத்திருக்கிறதாம். முதல் விஷயம் என்னவென்றால் தல அஜித்தின் அடுத்த பிறந்தநாள் அவரது 50வது பிறந்தநாளாம்.

எனவே அன்றைய நாளை கொண்டாட இப்போதே அஜித் ரசிகர்கள் பல திட்டங்களோடு காத்திருக்கிறார்கள். பொதுவாக அஜித் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆன்லைன் ஆஃப்லைன் என இருபக்கமும் தெறிக்க விடுவார்கள் அவரது ரசிகர்கள். அதிலும் 50வது பிறந்த நாள் என்றால் சொல்லவா வேண்டும்.

இரண்டாவது விஷயம் என்னவென்றால் தற்போது அஜித் நடித்து கொண்டிருக்கும் வலிமை படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வெளியாக போகிறது என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், ஒரு வேளை மே 1 அன்று அஜித்தின் 50வது பிறந்தநாளில் அவரது 60வது படம் வலிமை வெளியாகவும் அதிக வாய்ப்புள்ளதாம். இப்படி நடந்தால் அஜித் ரசிகர்களுக்கு இரட்டை ட்ரீட்தான்

முழு வீடியோ கீழே உள்ளது.