அஜித் என் உயிர் நண்பன் ! அஜித்தை பற்றி தப்பா பேசாதீங்க ! தல Haters-ஐ-ஐ விளாசிய சரண் !

எஸ்.பி.பியின் இறுதி சடங்கில் பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில், எஸ் பி பியின் மறைவிற்கு அஜித் வராதது குறித்து சமூகவலைத்தளத்தில் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அஜித் வராதது குறித்து எஸ் பி சரண் விளக்கமளித்துள்ளார்.

அஜித்தை திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது எஸ் பி பி தான். அதே போல எஸ் பி பியின் மகனான சரண் அஜித்தின் நெருங்கிய நண்பர்.

அவ்வளவு ஏன் அஜித் சென்ற முதல் ஷூட்டிங்கிற்கு கூட அவரிடம் நல்ல சட்டை இல்லை என்று சரணின் சட்டையை தான் போட்டு சென்றார்.

அதே போல தான் திரைப்பயணத்தில் எஸ் பி பி பாடிய பாடல்கள் அஜித்திற்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்தி கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். இதனால் நடிகர் அஜித், எஸ் பி பி மறைவிற்கு வராதது குறித்து பலர் விமர்சித்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் தனது தந்தையின் மரணத்திற்கு அஜித் வராதது குறித்து சரண் பேசுகையில் ‘அஜித் எனக்கு நல்ல நண்பர்.

அவர் வந்து அப்பாவ பார்த்தால் என்ன பார்க்கவில்லை என்றால் என்ன? இந்த மாதிரி சூழலில் வரணும் என்று அவசியம் இல்லை.

அவரோட சூழல் என்ன என்று எனக்கு தெரியும். அப்பாவின் இறப்பு பற்றி அஜித்தின் வருத்தம் எனக்கு தெரியும், அது ஒரு விஷயமே இல்ல, இதை பெரிது படுத்தாதீங்க” என்று தல Hatersகளுக்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

இப்போது இதைப்பத்தி பேச வேண்டியதுமில்லை என்று கூறி அஜித் மீதான ஒட்டுமொத்த விமர்சனங்கள் மற்றும் கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.