தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருகிறார், தற்பொழுது விஜய்க்கு மாஸ்டர் திரைப்படம் முடிவடைந்து திரைக்கு வர இருக்கிறது. எனவே விஜய் அடுத்ததாக எந்த திரைப்படத்தில் நடிக்க போகிறார் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.


இந்த நிலையில் இந்தியாவின் மோட்டார் பைக் ரேஸ் வீராங்கனை அலிஷா அப்துல்லா விஜய் பற்றி புகழ்ந்துள்ளது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அலிஷா அப்துல்லா அஜித்தின் மிக நெருக்கமான நண்பர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், அலிசா மற்றும் அஜித் இருவரும் பைக் ரேஸர் என்பது மட்டுமல்லாமல் அலிஷாவின் தந்தையும் அஜித்தும் ஒரு மோட்டார் சைக்கிள் ரேஸில் பங்கு பெற்றுள்ளார்கள் அதனால் அலிஷா மற்றும் அஜித் ஆகிய இருவரும் குடும்ப அளவில் மிகவும் நெருக்கமானவர்கள் என்பது தெரிந்த விஷயம் தான்.

அலிஷாவின் குட் புக்கில் இடம் பெற்றுள்ளவர்களில் தளபதி விஜய்யும் ஒருவர், சமீபத்தில் ரசிகர் ஒருவர் விஜய்யுடன் அலிசா இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருந்தார் இதை பார்த்த அலிசா என்னுடைய போனில் இருக்கும் மிகச்சிறந்த புகைப்படங்களில் இதுவும் ஒன்று என கூறியுள்ளார்.

அதேபோல் சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதை நடிகர் சாந்தனு கில்லி படம் குறித்த ஒரு ட்வீட் செய்திருந்தார் அப்போது அதனை ரீட்வீட் செய்த அலிஷா அப்துல்லா விஜய் பற்றி கூறியிருந்தார்.

அவர் கூறியதாவது விஜய் என்ன ஒரு ஹீரோ.. என்ன ஒரு ஸ்டைல்.. என குறிப்பிட்டு விஜய்க்கு வாழ்த்து கூறியும் பதிவு செய்திருந்தார். தற்பொழுது அந்த பதிவு வைரலாகி வருகிறது.