அஜித்துக்காக எழுதிய கதையில் ஜெயம் ரவி நடித்த மாஸ் திரைப்படம் !

தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனர்களுள் ஒருவர் அமீர். இவர் இயக்கிய படங்கள் படங்கள் குறைவானவை என்றாலும் அணைத்து படங்களுமே விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன! அந்த வகையில் 2013 ஆம் ஆண்டு வெளியான ஆதிபகவன் திரைப்படத்தை நடிகர் ஜெயம் ரவியை வைத்து இயக்கியிருப்பர். அந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு வேடங்களில் நடித்து வரவேற்பை பெற்றிருப்பார்.

இயக்குனர் அமீர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் ஆதிபகவன் படத்தின் ரகசியம் ஒன்றை போட்டுடைத்தார். அவர் கூறியதாவது,

முதலில் ஆதிபகவன் படத்தின் கதாநாயகநாக தல அஜித் அவர்களை தான் யோசித்ததாகவும் வரலாறு படத்தை பார்த்து அந்த முடிவை எடுத்ததாகவும், அதே போன்று ஒரு கதாபாத்திரத்தை வில்லனாக காமிக்க ஆசைப்பட்டதாவும் கூறினார்.

ஆனால் அந்த நேரத்தில் தல அஜித் அவர்களின் சம்பளம் படத்தின் படஜெட்டை தாண்டி சென்றதாகவும் கூறினார். அதனால் தான் தல அஜித்தை வைத்து ஆதிபகவன் எடுக்க முடியவில்லை என்று கூறினார்.

இருந்த போதும் ஜெயம் ரவி அந்த கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்ததாகவும் கூறி இருந்தார்.

வீடியோ கீழே உள்ளது.

இந்த பதிவில் தல அஜித் பற்றிய புதிய தகவல்கள் மற்றும் படங்களின் அப்டேட்டுகள் பல சுவாரசிய நிகழ்வுகள். அவரது புகைப்படங்களை புதிய படத்தின் ட்ரைலர் மற்றும் படக்காட்சிகள், மேலும் பல அழகான தருணங்களை நாங்கள் இந்த இணைய பக்கத்தில் பகிர்வோம்! பார்த்து தெரிந்து அறிந்து கொள்ளுங்கள். இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.