அஜித்திற்காக ஒகே சொன்ன தனுஷ் !அசந்து போன அஜித் ரசிகர்கள் ! மிரளும் திரையுலகம்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அதிரடியாக உருவாகி வருகிறது வலிமை திரைப்படம். இதுவரை இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாதம் துவங்கும் என தெரிகிறது. இனி இந்த படத்தில் வெளிநாடுகளில் எடுக்க வேண்டுமென திட்டமிட்டிருந்த காட்சிகளை தமிழ்நாட்டிலேயே எடுக்க படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். அதன்படி இந்த லாக்டவுன் முடிந்ததும் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிகிறது.

இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதற்குமுன் யுவன் அஜித் கூட்டணியில் வெளியான அனைத்து படங்களின் பாடல்கள், தீம் மியூசிக் மற்றும் பிஜிஎம் எல்லாமே மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக மங்காத்தா, பில்லா படங்களில் யுவன் போட்ட தீம் மியூசிக் இன்று வரை பேசப்படுகிறது. அந்த வகையில் வலிமை படத்தின் பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

டைட்டில் அறிவிப்புக்கு பிறகு வலிமை படத்தின் படப்பிடிப்பு மிகவும் காலதாமதமாகவே துவங்கியது. அந்த நேரத்திலேயே யுவன் வலிமை படத்திற்காக இரண்டு பாடல்களை முடித்திருந்தார். அதில் ஒரு பாடலுக்கான காட்சிகளை, முதல்கட்ட படப்பிடிப்பின் போது ஹைதராபாத்தில் படமாக்கினர். அந்த பாடல் தல அஜித்தின் இன்ட்ரோ பாடலாக இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் அந்த பாடல் சிறப்பாக வந்துள்ளது. தற்போது யுவன் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் முடித்து விட்டார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த படத்தில் மொத்தம் நான்கு பாடல்களும், இரண்டு தீம் மியூசிக்கும் இருக்குதாம். தல அஜித்தின் அறிமுக பாடல் ஒன்று, ஒரு காதல் பாடல், ஒரு கொண்டாட்ட பாடல் மற்றும் ஒரு மெலோடி பாடல் என வெரைட்டி ஆல்பமாக உருவாகி உள்ளது வலிமை ஆல்பம். அதோடு இந்த படத்தின் மெயின் தீம் மியூசிக் இதற்கு முன்னர் மங்காத்தா படத்தில் வந்த தீம் மியூசிக் போன்று மரண மாஸாக வந்திருக்கிறதாம். கண்டிப்பாக அந்த தீம் மியூசிக்கோடு தல அஜித்தை திரையில் பார்க்கும் போது, தியேட்டரில் அனல் பறக்குமாம்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார் என்னும் தகவல் இன்று இணைய தளங்களில் பரவி வருகிறது. பொதுவாக யுவனை பொறுத்தவரை தன் பாடல்களில் பல முறை பல நடிகர்களை பாட வைத்துள்ளார். அந்த வகையில் வலிமை படத்தில் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார் என்னும் தகவல் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பற்றி நாம் விசாரித்த போது உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால் இந்த தகவலை முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. ஒருவேளை நடிகர் தனுஷ் இந்த படத்தில் பாடியிருந்தால் உறுதியாக அந்த பாடல் வேற லெவல்ல இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அதோடு கண்டிப்பாக அஜித் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு பக்காவான ட்ரீட்டாக அமையும். இப்படி வலிமை படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு இப்போது அதிகரித்துள்ளது.