அஜித்தின் வலிமையில் நடிக்கும் விஜய் ரீல் மகன்! மரண மாஸ் அப்டேட் இதோ !

தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் தற்போது வலிமை படம் உருவாகி கொண்டிருக்கிறது.

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வலிமை படப்பிடிப்புகள் சமீபத்தில் மீண்டும் சென்னையில் தொடங்கப்பட்டது.

மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி என்பவரும், அஜித்துக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்தி கேயா என்பவரும் நடித்து வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து வலிமை படத்தையும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

அஜீத்துடன் இந்த படத்தில் மெர்சல் படத்தில் விஜய்க்கு சிறுவயது மகனாக அக் ஷத் என்ற குழந்தை நட்சத்திரம் நடித்திருப்பார்.

மெர்சல் படத்தில் தல அஜித்திற்கு மிகவும் பிடித்த சுட்டிக் குழந்தையாக இருந்தவராம். அதனால் வலிமை படத்தில் அந்த பையனை நடிக்க வைக்க அஜித்தான் ரெகமெண்ட் செய்தாராம்.

விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அக்சத் தற்போது தல அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட இருக்கிறார்.