அஜித்தால் தொடக்கூட முடியாத சாதனையை படைத்த தளபதி விஜய் !! ரசிகர்கள் கடும் மோதல் !!

நடிகர் விஜய் தற்போது தனது சினிமா வாழ்க்கையில் நினைத்துக்கூட பார்க்க முடியாத இடத்தில் உள்ளார் கடைசியாக வெளியான அவரது மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தற்பொழுது டிவிட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான அதிக ட்ரெண்டிங்கில் வந்த பெயர்களை வெளியிட்டுள்ளது அதில் தளபதி விஜய் முதலிடத்தை பிடித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் 4-வது இடத்தையும் தனுஷ் 9 வது இடத்தையும் அஜித் 10 வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளம் என்று வந்தாலே விஜய் தான் அதில் நம்பர் ஒன் என்று அவரது ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு மெர்சல் திரைப்படம் தான் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது 2018 சர்க்கார் படம் முதல் இடத்தை பிடித்துள்ளது 2019ஆம் ஆண்டு பிகில் திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதேபோல் 2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் மாஸ்டர் திரைப்படம் தான் முதல் இடத்தை பிடித்துள்ளது இதனால் இந்த சாதனையை அஜித் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அஜித் இந்த சாதனையை புரிய வாய்ப்பே இல்லை என்றும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால் சமூக வலைத்தளத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பெரும் போட்டி நடைபெற்று வருகிறது.இதனால் டிவிட்டர்ரில் பல மோதல்கள் ஏற்பட்டு வருகிறது வழக்கம் போல் மீடியாவும் இதை தற்போது பேசும் பொருளாக மாற்றி பேசி வருகிறது.