தமிழ் சினிமாவின் கிங் ஆஃப் பாக்ஸ் ஆஃபிஸ், கிங் ஆஃப் சோஷியல் மீடியா என்றால் தல அஜித் மற்றும் அவரது ரசிகர்கள்தான். தல அஜித் பற்றி சிறு தகவல் வெளியானால் கூட அதை மிகப்பெரிய கொண்டாட்டமாக கொண்டாடுவார்கள் அஜித் ரசிகர்கள்.

அந்த வகையில் நேற்று மாலை #കേരളംLovesതമിഴകംവാഴുംTHALA என்னும் ஹேஷ் டேகை ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர். கேரளா அஜித் ரசிகர்கள் சார்பாக ஆரம்பித்த இந்த டேக் போடப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது.

அதை தொடர்ந்து தற்போது 1.2 மில்லியனுக்கு அதிகமான ட்வீட்ஸ் இந்த ஹேஷ்டேகில் இதுவரை போடப்பட்டுள்ளது. ரொம்பவும் சாதாரணமாக தொடங்கிய இந்த டேகையே அசால்டா 1 மில்லியனுக்கு அதிகமாக ட்வீட்ஸ் போட்டு மாஸ் பண்ணியிருக்காங்க தல அஜித் ரசிகர்கள். இதுக்கே இப்படின்னா வலிமை அப்டேட்டுக்கு வேற லெவல் கொண்டாட்டம்தான்.